பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி அறிமுகமானது, கன்னட சீரியலாக இருந்தாலும் இவரை சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தது என்னவோ தமிழ் சீரியல்கள் தான். விஜய் டிவி தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்றான 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நடித்த ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பின்னர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கலந்து கொண்டு விளையாடினார் ரக்ஷிதா. ரசிகர்களின் பேராதரவோடு... 91 நாட்கள் தாக்குப் பிடித்து சிறப்பாக விளையாடினார். அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், மஹாலக்ஷ்மியிடம் கொஞ்சம் ஓவராக வழிந்தது... சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டது.
rachitha
மேலும் பிக்பாஸ் வீட்டின் உள்ளே மஹாலக்ஷ்மி இருந்தபோது... அவரின் கணவர் தினேஷ் தன்னுடைய முழு ஆதரவையும் கொடுத்தார். தங்கள் இருவருக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டுக்கு தன் மீது உள்ள தவறுதான் காரணம் என்றும் வெளிப்படையாக கூறினார். எனவே பிக்பாஸ் வீட்டை விட்டு மஹாலட்சுமி வெளியே வந்த பிறகு கணவருடன் சேர்ந்து வாழ, வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும்... மஹாலட்சுமி இதுவரை தன்னுடைய கணவரை சந்தித்து பேச கூட முயற்சி செய்யவில்லை.
நிர்வாணமாவே நடிச்சிட்டேன்... லிப்லாக் சீனெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல...! அமலா பால் பளீச் பதில்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடிதம் எழுதும் படி டாஸ்க் ஒன்று வைத்த போது , இனி தனக்கு குழந்தை பிறக்குமா என்பது கூட தெரியாது. அந்தநாள் தன்னுடைய அம்மா தான் தன்னுடைய குழந்தை என்பது போல் தெரிவித்தார். பின்னர் விக்ரமனுடன் ரக்ஷிதா பேசிக்கொண்டிருந்த போது கூடிய விரைவில் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க போவதாக தெரிவித்திருந்தார். குறிப்பாக பெண் குழந்தையை வளர்க்கவே ஆசை படுவதாக கூறினார்.
இந்த நிலையில் தற்போது மும்பை நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இதுகுறித்து பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 'தனியாக வாழும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம்' என்று அறிவித்திருந்தது. இந்த பதிவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த ரக்ஷிதா... 'இது போதும், இனிமேல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' என்று பதிவு செய்துள்ளார். எனவே கூடிய விரைவில் ரக்ஷிதா, பெண் குழந்தையை தத்தெடுப்பார் என தெரிகிறது.
ராதிகாவின் 'கிழக்கு வாசல்' தொடரில் இருந்து அதிரடியாக தூக்கப்பட்ட சஞ்சீவ்..! அவருக்கு பதில் இனி இந்த பிரபலமா?