கொசுவலை போன்ற மெல்லிய சேலையில்... தாராளமாக கவர்ச்சி காட்டி மிரள வைத்த மிருணாளினி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்
சேலையில் கவர்ச்சி தேவதையாக மாறி நடிகை மிருணாளினி நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன.
பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்தவர் நடிகை மிருணாளினி. பெங்களூருவில் தனது கல்லூரிப்படிப்பை முடித்த இவர் அங்குள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் டிக்டாக்கில் வீடியோ போடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.
மிருணாளினியின் டிக்டாக் வீடியோக்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கிலான பார்வைகளைப் பெற, அவரும் பேமஸ் ஆகத் தொடங்கினார். டிக்டாக் மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தை வைத்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் மிருணாளினி.
அந்த சமயத்தில் அவருக்கு கிடைத்த முதல் சினிமா வாய்ப்பு தான் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த மிருணாளினி ஹீரோயினாக அறிமுகமானது சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் திரைப்படம் மூலம் தான்.
இதையடுத்து இவர் பொன்ராம் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர்.மகன் திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். அதேபோல் ஆனந்த் சங்கர் இயக்கிய எனிமி திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இதையும் படியுங்கள்... அச்சு அசல் சமந்தா போலவே மாறிய தர்ஷா குப்தா.... சாகுந்தலம் கெட்-அப்பில் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் இதோ
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸான இப்படத்தில் நடிகர் விக்ரமின் கல்லூரி பருவ கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணாளினி ரவி.
தமிழைப் போல் தெலுங்கிலும் நடிகை மிருணாளினிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது தெலுங்கில் ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அல்லுடு, மாமா மச்சிந்திரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் மிருணாளினி.
இந்நிலையில், நடிகை மிருணாளினி சேலையில் நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. கொசுவலை போன்று இருக்கும் வெள்ளை நிற சேலையில் இடுப்பழகு தெரிய போஸ் கொடுத்து இவர் நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?