அட்லீயும் இல்ல; தெலுங்கு இயக்குனரும் இல்ல... தளபதி 68 படத்தை இயக்கப்போவது இந்த இளம் இயக்குனரா?

லியோ படத்துக்கு பின் விஜய் நடிக்க உள்ள தளபதி 68 திரைப்படத்தை இயக்கப்போவது அட்லீ இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thalapathy Vijay

நடிகர் விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங் இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடைய உள்ளது. அதன் பின் பின்னணிப் பணிகளை வேகமாக முடித்து படத்தை வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு கொண்டு வர உள்ளனர். இப்படத்தை எடுத்து நடிகர் விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

அந்த வகையில் விஜயின் 68 ஆவது படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு இயக்குனர் கோபி சந்த் தான் தளபதி 68 படத்தை இயக்க உள்ளார் என சமீபத்தில் பேச்சு அடிபட்டது.

இதையும் படியுங்கள்... குழந்தை விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு! இது போதும்.. செம்ம குஷியில் பிக்பாஸ் ரக்ஷிதா போட்ட பதிவு


ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி விஜயின் 68 ஆவது படத்தை அட்லியும் இயக்கப் போவதில்லை கோபிசந்தும் இயக்கப் போவதில்லை என்று கூறப்படும் வேளையில் அப்படத்தை, கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக தகவல் பரவி வருகின்றன.

மேலும் இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இது அந்நிறுவனம் தயாரிக்கும் நூறாவது படம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டணி உறுதியானால் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் முதல் படமாக இது இருக்கும். இந்தப் படம் குறித்த அறிவிப்பு வருகிற ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... மெல்லிய இடையை இறுக்கி பிடித்திருக்கும் சேலையில்... பட்டாம்பூச்சி போல் ஜொலிக்கும் பிரியா பவானி சங்கர்

Latest Videos

click me!