ஸ்ரீதேவி மகள் காதலிக்கும் இளம் நடிகர் இவர் தானாம்.. ஆனா இருவரும் சேர்ந்து எடுத்த அந்த ஒரு முடிவு..

Published : Jan 18, 2024, 01:21 PM IST

ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் கடந்த ஆண்டு வெளியான ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

PREV
18
ஸ்ரீதேவி மகள் காதலிக்கும் இளம் நடிகர் இவர் தானாம்.. ஆனா இருவரும் சேர்ந்து எடுத்த அந்த ஒரு முடிவு..

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும். 2018-ம் ஆண்டு Dhadak என்ற இந்தி படத்தில் அறிமுகமான அவர் கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தேவாரா படத்திலும் நடித்து வருகிறார்.

28

இதே போல் ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூரும் கடந்த ஆண்டு வெளியான ஆர்ச்சீஸ் படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த வேதங் ரெய்னாவை குஷி காதலிப்பதாக கூறப்படுகிறது.

38

இருவரும் அடிக்கடி ஜோடியாக வெளியே செல்கிறார்களாம். இருப்பினும் தங்கள் உறவை பற்றி பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிக்க இருவரும் விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

48
Kushi Kapoor

தி ஆர்ச்சிஸ் படத்தில் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து ஒருவருக்கொருவர் நெருக்கமாகிவிட்டனர் என்றும், மேலும் சில காலமாக உறவில் உள்ளனர் என்றும் இந்த ஜோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

58

கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியே டேட்டிங் செல்வதாகவும். அவர்கள் ஒருவருக்கொருவர் நேரத்தை செலவிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

68
kushi kapoor

தங்கள் காதல் விஷயம் வெளியே தெரிந்தால் அனைவரையும் அதை பற்றி தான் பேசுவார்கள் என்றும் யாரும் தங்களின் படம் மற்றும் வேலை குறித்தும் பேசமாட்டார்கள் எனவும் இந்த இருவருக்கும் நெருக்கமான நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

78
Kushi Kapoor

இதன் காரணமாகவே தங்கள் காதலை பற்றி உலாவரும் வதந்திகளையும் இருவரும் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்கள் தங்கள் காதல் உறவை பகிரங்கமாக பொதுவெளீயில் அறிவிக்கமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். தங்கள் காதலை ரகசியமாக வைக்க கொள்ள இருவரும் கடுமையாக உழைத்து வருகின்றனர் அவர் தெரிவித்துள்ளார்.

 

88

முன்னதாக கடந்த மாதம் ‘காஃபி வித் கரண் 8’ நிகழ்ச்சியின் போது, கரண் ஜோஹர், குஷியிடம் நீங்கள் ரெய்னாவுடன் டேட்டிங் செய்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குஷி கபூர் அது பொய்யான தகவல் என்றும், தான் சிங்கிளாக இருப்பதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories