Published : Oct 11, 2022, 09:04 PM ISTUpdated : Oct 11, 2022, 09:27 PM IST
தென்னிந்திய சினிமா உலகில் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபல நட்சத்திரங்கள் பலர் உண்டு. இவர்களில் யாரெல்லாம் கலப்புத் திருமணம் செய்துள்ளனர் என்பது குறித்த பதிவை இங்கு காணலாம்.
தமிழில் முன்னணி நாயகராக வலம் வரும் விஜய் தனது ரசிகர்களில் ஒருவரான சங்கீதா சொர்ணலிங்கம் என்பவரை காதலித்து 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த விஜய்யும் இந்து மதத்தை சேர்ந்த சங்கீதாவும் தங்களது பெற்றோர்களை பல முயற்சிகள் எடுத்து சம்மதிக்க வைத்த பின்னர், திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ஜோடிக்கு இந்து முறைப்படி தான் திருமணம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் அப்போதைய பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஜோசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.
25
Ajith Shalini
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் ஷாலினி பற்றி பேசாமல் இருக்க முடியாது.. நட்சத்திர தம்பதிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க டாப் ஸ்டார்கள் ஆன இவர்களின் திருமணம் கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது. ஹிந்து பிராமணரான அஜித்தும், கிறிஸ்டின் மதத்தை சார்ந்த ஷாலினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அமர்க்களம் படம் மூலம் ஏற்பட்ட காதல் திருமணமாக மலர்ந்தது. திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டார் ஷாலினி. இந்த தம்பதிக்கு அனுஷ்கா, அத்விக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
சூர்யா ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார் துவங்கி கிட்டதட்ட ஏழு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். இதில் காக்க காக்க படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருதரப்பு குடும்பத்தாரின் சம்மதத்துடன் சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி திருமணம் முடிந்தது. சென்னையில் மிகப் பிரபலமான ஹோட்டலில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் சூர்யா தமிழ் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜோதிகா பஞ்சாபி முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுதான். இவர்கள் இருவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். 2007 ஆம் ஆண்டு தியா என்கிற பெண் குழந்தையும்,2010 ஆம் ஆண்டு தேவ் என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது.
45
Asin Thottumkal and Rahul Sharma
தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தவர் அசின். இவர் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராகுல் ஷர்மாவை கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அசின் கத்தோலி கிறிஸ்தவராவார். அதேபோல ராகுல் ஒரு இந்து. இவர்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர். இரு மதம் முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற்றது இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
பருத்திவீரன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான பிரபல நடிகை பிரியாமணி. முஸ்தபா ராஜ் என்பவரை காதல் கரம் பிடித்தார். இவர்களது காதல் ஐபிஎல் கிரிக்கெட் களத்தில் தான் ஏற்பட்டுள்ளது. சிறிது காலம் டேட்டிங் செய்த இவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி மனம் முடித்துக் கொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த பிரியாமணியும், முஸ்லிம் மதத்தை சேர்ந்த முஸ்தபாவும் உறவினர்கள் முன்னிலையில் மணமுடித்துக் கொண்டனர்.