ஆனால் இந்த திரைப்படத்தின் முதல் காட்சி ஒளிபரப்பப்பட்ட நேரத்திலிருந்து, இப்போது வரை தொடர்ச்சியாக இந்த திரைப்படத்தின் திரைக்கதையின் மீதும், இசையின் மீதும் பெரிய அளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த திரைப்படத்தை முதல் ஷோவை பார்த்த பலர், காதுகள் வலிக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் இசை இருந்ததாகவும், தேவிஸ்ரீ பிரசாத் தான் இதற்கு காரணம் என்னும் கூறிய நிலையில், உடனடியாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் இருந்து சவுண்ட் மிக்சிங்கில் தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கும் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல சிறுத்தை சிவாவின் திரைக்கதையும் பெரும் தொய்வை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.