தமிழ் மொழியை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ஆர்யாவின் ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கிய கட்லி தொடர்ச்சியாக "தெறி", "மெர்சல்" மற்றும் "பிகில்" என்று மூன்று திரைப்படங்களை விஜயை வைத்து இயக்கி அதை மெகா ஹிட் திரைப்படங்களாக மாற்றினார். இந்த சூழலில் சுமார் நான்கு ஆண்டு இடைவெளிக்கு பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டு பாலிவுட் உலகின் உச்ச நடிகர் சாருக் கானை வைத்து "ஜவான்" என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 1,148 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது.