தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் சூரியை தேடி சென்று... தான் இயக்க உள்ள படத்தின் கதையை கூற அந்த படத்தில் நடிக்க முடியாது என சூரி கூறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், உச்ச நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், சினிமா இயக்கம் தொடர்பான படிப்பை லண்டனில் படித்து விட்டு, இந்தியா திரும்பிய நிலையில் தன்னுடைய கதையை லைகா நிறுவனத்திடம் கூறி, தயாரிப்பாளரையும் பிடித்து விட்டார்.
25
jason sanjay
தன்னுடைய கதையை மெருகேற்ற சில மாதங்கள் எடுத்து கொண்ட சஞ்சய்... தற்போது முழு கதையையும் முடித்து விட்டு, தன்னுடைய படத்திற்கு ஏற்ற ஹீரோவை தேடுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் ஏற்கனவே வெளியான தகவலின் படி, கவின், விஜய் சேதுபதி, விக்ரம் மகன் துருவ் ஆகியோர்... இவரின் லிஸ்டில் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நடிகர் சூரியை சந்தித்து தன்னுடைய கதையை விஜய் மகன் சஞ்சய் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
45
soori
படத்தின் கதையை பொறுமையாக ஒரு மணிநேரம் கேட்ட விடுதலை நாயகன் சூரி.. "தம்பி உங்க கதை ரொம்ப அருமையா இருக்கு. கண்டிப்பா நீங்க சொன்னதை எடுத்தால் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இதுபோன்ற ஒரு மாஸ் கதையில் நான் ஹீரோவா நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
இந்த படத்திற்கு நான் பொருத்தமானவன் இல்லை என கூறி அதிர்ச்சி கொடுத்துவிட்டாராம். காரணம் சூரியின் மிகப்பெரிய பிளஸ்சாக பார்க்க படுவதே... தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிப்பதே, பறந்து பறந்து சண்டை போடுவது... ஒரே நேரத்தில் 20 பேரை பந்தாடுவது என மாஸ் கதை என்றால் அதில் அவர் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்து தான் சூரி இப்படி கூறி உள்ளதாக கூறப்படுகிறது. நம்பி சென்ற சூரியும் பேக் வாங்கியதால், மீண்டும் தன்னுடைய படத்திற்கு ஏற்ற ஒரு ஹீரோவை தேடுவதில் ஜேசன் சஞ்சய் ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.