
வாழ்வியலை தன்னுடைய திரைப்படங்கள் மூலம் அழகாக வெளிப்படுத்தும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், நேற்று வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து, இயக்கி உள்ள திரைப்படம் தான் 'விடுதலை 2'. இந்தப் படத்தில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், விஜய் சேதுபதி முன்னிலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சூரிய ஜோடியாக நடிகை பவானி ஸ்ரீ நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இவர்களை தவிர இயக்குனர் பாலாஜி சக்திவேல், சேத்தன், ராஜு மேனன், அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஹீரோயின்களையே அழகில் ஓவர் டேக் செய்யும் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் மனைவி மோனிஷா; போட்டோஸ்!
ஜெயமோகன் எழுதிய துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் முதல் பாகம், கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய நடிகர் சூரிக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தி தந்தது. முதல் பாகத்தை எந்த இடத்தில் வெற்றிமாறன் முடித்தாரோ, அதே இடத்தில் இருந்து இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. எனவே இந்த படத்தின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்வதில் பல ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கமும் இதுக்கு முக்கிய காரணம்.
அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான விடுதலை இரண்டாம் பாகம் திரைப்படத்தில், விஜய் சேதுபதி எப்படி வாத்தியாராக மாறுகிறார்? அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? என்பதை விவரிக்கும் விதத்தில் இருந்தது. சூரி தன்னுடைய அம்மாவுக்கு கடிதம் மூலம் ஒரு கதையை சொல்வது போலவும், அதே கதையை விஜய் சேதுபதி ஒரு போலீசிடம் சொல்வது போன்றும் காட்சி அமைக்கப்பட்டது வெற்றிமாறனின் ஸ்க்ரீன் பிளே மேஜிக்கை உணர வைத்தது.
அதேபோல் விஜய் சேதுபதி ஒரு போராளியாக மாற காரணம் என்ன? தமிழர் மக்கள் படை ஏன் உருவாகிறது? மஞ்சு வாரியருக்கு என்ன ஆனது? இந்த படத்தின் மூலம் கம்யூனிசத்தையும் பேசி இருந்தார் வெற்றிமாறன். முதல் பாகம் கொஞ்சம் நொண்டியடித்தாலும், இரண்டாம் பகுதி வேகமாக நகர்கிறது. குறிப்பாக இளையராஜாவின் இசை கதையை மெருகேற்றி இருந்தது.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற சூரி நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தின் ஓப்பனிங் வசூலை சல்லி சல்லியாய் நொறுக்கியுள்ளது. லால் சலாமை விட இரண்டு மடங்கு வசூலை அள்ளி உள்ளது. அதன்படி விடுதலை 2 திரைப்படம், முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ.8 கோடியும்... உலக அளவில் மொத்தம் 9 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லால் சலாம் திரைப்படம் முதல் நாளில் ரூ.3 .55 கோடி மட்டுமே வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
'விடுதலை 2' திரைப்படம், தலைவரின் லால் சலாம் வசூலை மிஞ்சி உள்ள, விடுதலை முதல் பாகம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா. முதல் நாளில் 3.5 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தாலும், உலக அளவில் 4 நாட்களில் மட்டும் 28 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
13 வயதிலேயே நடிப்பில் அம்மா ஐஸ்வர்யாவுக்கே டஃப் கொடுக்கும் மகள்! பள்ளி நாடகத்தில் அசத்திய ஆராத்யா!