7 வருட காதல்; நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? க்யூட் லவ் ஸ்டோரி!

Published : Dec 21, 2024, 08:19 AM IST

நடிகர் ஜீவாவின் க்யூட் லவ் ஸ்டோரி பற்றி தெரியுமா? அவரின் மனைவி யார்? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

PREV
110
7 வருட காதல்; நடிகர் ஜீவாவின் மனைவி யார் தெரியுமா? க்யூட் லவ் ஸ்டோரி!
Actor Jiiva

பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி சௌத்ரியின் கடைசி மகன் தான் ஜீவா. சேரன் பாண்டியன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஜீவா அறிமுகமானார். பின்னர் தனது தந்தையின் 50-வது படமான ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அவரின் முதல் படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

210
Actor Jiiva

தொடர்ந்து தித்திக்குதே படத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களே கிடைத்தது. பின்னர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் படத்தில் ஜீவா நடித்திருந்தார். இந்த படம் அவரின் கெரியரில் பிரேக் த்ரூ படமாக அமைந்தது. இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

310
Actor Jiiva

இந்த திரைப்படம் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது, பின்னர் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அவர் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

சிவாஜி கணேசனுக்குப் பிறகு, சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில், விருது பெற்ற ஒரே தமிழ் நடிகர் ஜீவா மட்டுமே.

410
Actor Jiiva

டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ , நண்பன் , முகமூடி , நீதானே என் பொன் வசந்தம், என்றென்றும் புன்னகை, கலகலப்பு 2 என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு வெளியான கலகலப்பு படத்தின் மூலம் ஜீவா பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

கடந்த 20207-ம் ஆண்டு ஜீவா, சுப்ரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

510
Actor Jiiva

சரி, ஜீவாவின் காதல் கதை பற்றி தெரியுமா?

தனது 10-வது வயதில் முதன்முறையாக ஜீவா சுப்ரியாவை சந்தித்துள்ளார். ஜீவாவும் சுப்ரியாவும் ஒரே பள்ளியில் படித்தனர். சிறு வயதில் இருந்தே இருவரும் நண்பர்களாக இருந்து வந்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் நண்பர்களாக இருந்த நிலையில் இருவருக்கும் நட்பை தாண்டி ஒரு ஈர்ப்பு இருந்துள்ளது.

610
Actor Jiiva

ஜீவா தான் முதலில் தனது காதலை சுப்ரியாவிடம் வெளிப்படுத்தி உள்ளார். சுப்ரியாவுக்கும் ஜீவா மீது காதல் இருந்த நிலையில் உடனே அவரும் ஓ.கே சொல்லி விட்டாராம். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ஜீவா கிராபிக்ஸ் டிசைனிங் படித்தார். பின்னர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.

710
Actor Jiiva

மறுபுறம் எம்.பி.ஏ படித்து படித்து முடித்த சுப்ரியா, இண்டீரியர் டிசைனிங் படித்துள்ளார். இருவரும் 7 ஆண்டுகள் காதலர்களாக இருந்துள்ளனர்.

பின்னர் இருவரும் தங்கள் துறையில் ஓரளவு முன்னேறி இருந்த சூழலில் தங்கள் காதலை குடும்பத்தினரிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர்.

810
Actor Jiiva

இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2007-ம் ஆண்டு ஜீவா – சுப்ரியா ஜோடி திருமணம் செய்து கொண்டனர். டெல்லியில் திருமணமும், சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதில் கலந்து கொண்டார். இதில் பல்வேறு அரசியல் பிரபலங்களும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

910
Actor Jiiva

ஜீவா – சுப்ரியா தம்பதிக்கு 2010-ம் ஆண்டு ஆண்குழந்தை பிறந்தது. திரைத்துறை, தனிப்பட்ட வாழ்க்கை இரண்டிலும் எந்த சர்ச்சைகளும் இன்றி அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தனது மனைவி உடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.  

 

1010
Black Movie

தனது 20 ஆண்டுகளுக்கு மேலான திரை வாழ்க்கையில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் ஜீவா நடித்துள்ளார். மேலும் அவர் வெற்றி தோல்விகளை மாறி மாறி சந்தித்துள்ளார் ஜீவா. இடையே ஜீவாவின் சில படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் ஜீவா நடிப்பில் கடைசியாக வெளியான பிளாக் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories