அட.. நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதாவா இது? ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்காங்களே..

First Published | Aug 10, 2024, 11:29 AM IST

நாக சைதன்யாவின் வருங்கால மனைவி சோபிதா துலிபாலாவின் பழைய போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த போட்டோக்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். 

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதுதொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நடிகை சோபிதா தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். 

2010-ல் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கிய சோபிதா 2013 மிஸ் இந்தியா போட்டியில் இறுதிப் போட்டியாளராக இருந்தார், அந்த நேரத்தில் பிரபலமாக மாறினார். இந்த நிலையில் சோபிதாவின் பழைய போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த போட்டோக்களில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார். 

Tap to resize

அப்போது அவரிம் முக அமைப்பு வட்டமாக உள்ளது. சோபிதாவின் மூக்கு, உதடு அமைப்பு என அனைத்துமே முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, சோபிதாவின் தற்போதைய புகைப்படங்கள் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டுகின்றன.

முக்கிய கன்ன எலும்புகள் மற்றும் தாடையுடன் அவர்ரின் முக அம்சங்கள் இப்போது மிகவும் கூர்மையாகவும் உள்ளன. சோபிதாவின் மூக்கு, உதடும் மாறி உள்ளது. அவரின் புருவமும் இப்போது அடர்த்தியாகவும், நன்கு வடிவமாகவும், முழுமையாகவும் உள்ளன. சோபிதாவின் பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சோபிதாவா இது தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதனிடையே சோபிதா தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாக சைதன்யா உடன் மகிழ்ச்சியாக க்யூட்டா போஸ் கொடுக்கிறார் சோபிதா. 

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான ராமன் ராகவ் 2.0' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் சோபிதா துலிபாலா. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், வசூல் ரீதியாக சுமாரான வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து தெலுங்கு, மலையாளத்தில் வெற்றி படங்களில் நடித்ததால் பிசியான நடிகையாக மாறினார்.

ஹிந்தியில் அறிமுகமான சோபிதா குறுகிய காலத்தில் திரையுலகில் தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். அனில் கபூர், நவாசுதீன் சித்திக் மற்றும் விக்கி கௌஷல் போன்ற பல நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். அதிக சம்பளம் வாங்கும் OTT நட்சத்திரங்களில் சோபிதாவும் ஒருவர் ஆவார். தமிழில் 'பொன்னியின் செல்வன் 1', 'பொன்னியின் செல்வன்: II' படங்களில் சோபிதா நடித்திருந்தார். 

நாக சைதன்யா இதற்கு முன்பு நடிகை சமந்தாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.  எனினும் இந்த திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2021-ம் ஆண்டு சமந்தாவும் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!