சமந்தா உடனான விவாகரத்துக்கு பின்னர், தென்னிந்திய நடிகை சோபிதாவை, நாக சைதன்யா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ள நிலையில், நாக சைதன்யா மீதான காதலை வெளிப்படுத்தி சோபிதா போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
8 வருடங்கள் உருகி உருகி காதலித்து, நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா... அவரிடம் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். இந்த விவாகரத்திற்கான காரணம் குறித்து, இருவருமே இதுவரை தெரிவிக்கவில்லை என்றாலும், சமந்தாவின் நண்பர் ப்ரீத்தம் போட்டிருந்த பதிவு மூலம் சோபிதா தான் காரணமா என்கிற சந்தேகம் எழுந்தது.
24
Preetham Slam Sobhita Dhulipala:
மறைமுகமாக சோபிதாவை தாக்கி அவர் தாக்கி போட்டிருந்த அந்த பதிவு வைரலாக பார்க்கப்பட்டது. எனவே நெட்டிசன்களும், சமந்தாவை, சைதன்யா விவாகரத்து செய்வதற்க்கு முன்பே சோபிதாவுடன்... தொடர்பு வைத்திருந்தாரா என கேள்வி எழுப்பி வந்தனர்.
இது ஒருபுறம் இருந்தாலும், நாக சைதன்யா மற்றும் சோபிதா இருவரும் தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவடைந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அதே போல் இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது. நிச்சயத்தார்ஹம் மிகவும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடந்திருந்தாலும், திருமணத்தை பிரமாண்டமாக நடத்த நாகர்ஜுனா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
44
Sobhita Dhulipala Heart Melting love Post:
மேலும் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சோபிதா முதல் முறையாக சமூக ஊடகங்களில் நாக சைதன்யா மீதான காதலை வெளிப்படுத்தும் விதத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் "என் அம்மா உனக்கு என்னவாக இருந்தாலும் சரி.. ஆனா, என் அப்பா உனக்கு எப்படி சம்பந்தம்? நீயும் நானும் எப்பொழுது சந்தித்தாலும் பரவாயில்லை.. எங்கள் இதயங்களில் காதல் இருக்கிறது.. எங்கள் இதயங்கள் சிவப்பு பூமி போல, மழையில் தத்தளிக்கின்றன. பிரிவைத் தாண்டி ஒன்றுபட்டுள்ளோம் என்று ஷோபிதா கவிதம் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுடன் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, சோபிதா, சைதன்யாவுடன் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.