என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்..! காதலர் தினத்தில் கணவர் சினேகனுக்கு காலில் மெட்டி அணிவித்த கன்னிகா!

First Published | Feb 15, 2023, 1:00 PM IST

பிரபல பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கு அவரின் மனைவி கன்னிகா... இந்த வருட காதலர் தினத்தை முன்னிட்டு காலில் மெட்டி போட்டு செல்லபிரேட் செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமாவில், சர்ச்சைகளுக்கு வித்திட்ட சில பாடல்களை எழுதி பரபரப்பை ஏற்படுத்திய முன்னணி பாடலாசிரியர் கவிஞர் சினேகன். சில திரைப்படங்களிலும் நடித்துள்ள இவர், பல வருடங்களாக 'நாதஸ்வரம்' சீரியல் நடிகை கன்னிகாவை காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

மிக பிரமாண்டமாக நடந்த இவர்களின் திருமணத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் உற்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். சமூக வலைத்தளத்தில், செம்ம ட்ரெண்டிங் ஜோடியாக இருக்கும் இவர்கள், எதையுமே மிகவும் வித்தியாசமாக செய்து, ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

காதலர் தின ஸ்பெஷல்.. ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சினேகா, காஜல் ஆகிய பல பிரபலங்கள் வெளியிட்ட கியூட் போட்டோஸ்!

Tap to resize

அந்த வகையில் இந்த ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் ஒரே நிற உடையில்... போட்டோ ஷூட் செய்து கொண்டுள்ள நிலையில், மிகவும் வித்தியாசமான பரிசு ஒன்றை கணவருக்கு அளித்துள்ளார் கன்னிகா.

பழங்காலத்தில் திருமணம் ஆன ஆண்கள், தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பதை தெரிவிக்கும் விதமாக மெட்டி அணிவார்கள் என்று கேள்வி பட்டிருப்போம் ஆனால், காலம் மாற மாற அந்த பழக்கமும் மறக்கடிக்கப்பட்டு விட்டது. இந்த பழங்கால பழக்கத்தை தான், மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளார் கன்னிகா.

என் காதலை ஏற்க யார் தயார்? மேலாடை இன்றி... ரோஜா மலரால் முன்னழகு மறைத்து புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா!

தன்னுடைய காதல் கணவர் சினேகனுக்கு காலில் மெட்டி அணிவித்து அழகு பார்த்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Latest Videos

click me!