தமிழ் திரையுலகில் மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை இவர் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. தற்போது விஜய்யை வைத்து லியோ என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
24
இப்படி தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜுக்கு படத்துக்கு படம் சம்பளமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன்படி தற்போது லியோ படத்திற்காக அவர் ரூ.20 முதல் 25 கோடி வரை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பு நிறுவனம் தொடங்க இருப்பதாகவும் கூறி இருந்தார்.
அந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தன்னிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்களை இயக்குனர்களாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறி இருந்தார். அதோடு அவர் தயாரிக்க உள்ள முதல் படத்தை ஆடை, மேயாத மான் போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் தான் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் அப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க வைக்க பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறதாம்.
44
தமிழ் சினிமாவில் அதிக மவுசு உள்ள இயக்குனராக வலம் வந்துகொண்டிருக்கும் நேரத்தில், இப்படி திடீரென இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இறங்க உள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர். தயாரிப்பில் ஏதேனும் சிக்கல் வந்தால் அது இயக்குனர் லோகேஷையும் பாதிக்கும் என்பதால் படம் இயக்குவதில் மட்டும் லோகேஷ் கவனம் செலுத்துவது நல்லது என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.