எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வங்கியில் நடக்கும் சுரண்டல்களை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படத்தில் நடிகர் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் சமுத்திரக்கனி, அமீர், பாவனி, சிபி சந்திரன், மோகன சுந்தரம், குக் வித் கோமாளி தர்ஷன், ஜான் கொகேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது.