கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கிய ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ என்கிற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய ஆவணப்படம் இதுவாகும். இந்த ஆவணப்படம் ஊட்டி அருகே உள்ள முதுமலையில் தான் படமாக்கப்பட்டது. அங்கு ரகு, அம்மு என்கிற இரண்டு யானைகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வந்த பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோரை மையமாக வைத்து தான் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டு, இன்று உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.