தியேட்டரில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
கண்ணை நம்பாதே
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள கண்ணை நம்பாதே திரைப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் ஆத்மிகா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரசன்னா, ஸ்ரீகாந்த், சுபிக்ஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை இயக்குனர் மு.மாறன் இயக்கி உள்ளார்.
கோஸ்டி
காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் கோஸ்டி. இப்படத்தை கல்யாண் இயக்கி உள்ளார். இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, யோகிபாபு என மிகப்பெரிய நகைச்சுவை பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் போலீஸாக நடித்துள்ளார்.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்
வாத்தி
தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கிய இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை சம்யுக்தா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் ரூ.120 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.