ரஜினி நடிப்பில் ஏற்கனவே ஒரு மாவீரன் என்கிற திரைப்படம் உள்ள நிலையில், தற்போது அதே தலைப்பில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்துள்ளார். மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். சமூக கருத்துடன் கூடிய பேண்டஸி திரைப்படமாக உருவாகி உள்ள இதில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கார்டூனிஸ்ட் ஆக நடித்து இருக்கிறார்.