மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மாவீரன். பேண்டஸி கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கார்டூனிஸ்டாக நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும், இரண்டாம் பாதி டல் அடிப்பதாகவும் கலவையான விமர்சனங்கள் வந்தாலும், பேமிலி ஆடியன்ஸை இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் காரணமாக மாவீரன் படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. அதன்படி முதல் நாளில் மட்டும் இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.
இதையும் படியுங்கள்... யோகி பாபுவை கலாய்த்த தல தோனி.. 'LGM' படத்தின் விழாவில் நடந்த சம்பவம்.. க்யூட் வீடியோ..
திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் மாவீரன் திரைப்படம் கொரியன் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் சாடியுள்ளார். அதன்படி கடந்த 2020-ம் ஆண்டு வெளிவந்த ஹிட்மேன் ஏஜண்ட் ஜுன் என்கிற கொரியன் படத்தை காப்பி அடித்து தான் மாவீரன் படத்தை எடுத்துள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த படத்தின் கதையை எடுத்து அதில் சில கதாபாத்திரங்களை மாற்றி தேவையான அளவு மசாலா சேர்த்து எடுத்தால் உடனடி கிரிஞ் ரெசிபி ரெடி என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை.
மாவீரன் படத்தில் சண்டைனாலே பயந்து நடுங்கும் சிவகார்த்திகேயன் ஒரு குரல் கேட்டதும் மாவீரனாக மாறி எதிரிகளை அடித்து துவம்சம் செய்வார். விஜய் சேதுபதி தான் இதற்கு பின்னணி குரல் கொடுத்திருந்தார். இந்த கான்செப்டை கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த ஸ்ட்ரேஞ்சர் தென் பிக்ஷன் என்கிற ஆங்கில படத்தில் இருந்து திருடி எடுத்துள்ளதாகவும் ப்ளூ சட்டை மாறன் சாடியுள்ளார். இவர் இப்படி அடுக்கடுக்கான பதிவுகளை போட்டாலும், மாவீரன் படக்குழு இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
இதையும் படியுங்கள்... 9 வருடங்களுக்கு பின் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது!