சமந்தா - விஜய் தேவரகொண்டா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள, 'குஷி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதை படக்குழு, புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் 'குஷி'. செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தை, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் காதல் காவியமாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.
24
கடந்த 5 மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பை சமந்தா முடித்துவிட்ட நிலையில்... இன்று ஒட்டு மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் விஜய் தேவாரகொண்டா கலந்து கொண்டுள்ளார். படக்குழுவினர் அவருடன் கேக் வெட்டி, ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக தற்போது அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே 'குஷி' படத்தில் இருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தின் ஆடியோ லான்ச்சை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
44
சமந்தா நடிப்பில் கடைசியாக வெளியான, 'சாகுந்தலம்' மற்றும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'லிகர்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தராத நிலையில், இப்படம் இவர்கள் இருவருக்குமே வெற்றிப்படமாக அமையுமா? என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.