தெலுங்கு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் தமிழில் சில நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவரின் முகத்தை ரசிகர்கள் தெளிவாக பார்த்ததே 'அட்டகத்தி' படத்தில் தான். இப்படம் தினேஷுக்கு மட்டும் இன்றி ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலக வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எந்த ஒரு பிடிப்புமே இல்லாமல் நடித்து வந்த இவருக்கு, அட்டகத்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் ஆச்சர்யங்கள், புத்தகம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடித்த, 'ரம்மி' திரைப்படம், ஐஸ்வர்யா ராஜேஷை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றிருந்தாலும், வலுவான கதாபாத்திரங்கள் இவருக்கு அமையவில்லை.
பேசலன்னா என் பொண்ணு வாய்லயே குத்துவா...கமலிடம் பேசிய ரோபோ சங்கர்!!
இந்நிலையில் தான், பல நடிகைகள் நடிக்க மறுத்த, 'காக்கா முட்டை' படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். யார் இந்த நடிகை என ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகத்தையே இந்த படம் திரும்பி பார்க்க வைத்தது மட்டும் இன்றி... ஐஸ்வர்யா ராஜேஷ் திரையுலக பயணத்தில் இப்படம் மாஸ்டர் பீஸாகவும் அமைந்தது . தற்போது பல படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்றால் அதற்க்கு ஆரம்ப புள்ளி இந்த படம் தான்.
தற்போது வெகேஷனுக்காக US சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ஹவாலி தீவில், குட்டை டவுசரில்.. கடற்கரையில் நின்றபடி... சூரிய உதயத்தை ரசிக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இது ராமராஜன் டவுசர் இல்ல... என கமெண்ட் போட்டு வருகிறார்கள்.