அவரும் ஒரு சில படங்களில் Anti Heroவாக நடித்துள்ளார் என்றபோது பெரிய அளவில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்காத ஒருவர் தான் இன்று இந்தியாவின் high paid வில்லனாக மாறியுள்ளார். அவர் வேறு யாரும் அல்ல, உலக நாயகன் கமல்ஹாசன் தான்.
நாக் அஸ்வின் இயக்கத்தில், வைஜயந்தி மோவிஸ் வழங்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் பல ஆண்டுகள் கழித்து ஒரு ஹை டெக் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்துவருகிறார் கமல்ஹாசன். இந்த படத்திற்காக அவர் 25 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல இறுதியாக ஜவான் படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சுமார் 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாகவும் கூறப்படுகிறது.