ஆபாச பட உலகை விட்டு நான் விலகிட்டேன்... ஆனா நீங்க விலகல! வம்பிழுத்த நடிகை ரோஜாவை வச்சு செய்த சன்னி லியோன்

Published : Jul 16, 2023, 09:53 AM IST

ஆந்திர மாநிலத்தில் அமைச்சராக இருக்கும் நடிகை ரோஜா, தன்னை விமர்சித்ததை அறிந்த சன்னி லியோன், அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

PREV
14
ஆபாச பட உலகை விட்டு நான் விலகிட்டேன்... ஆனா நீங்க விலகல! வம்பிழுத்த நடிகை ரோஜாவை வச்சு செய்த சன்னி லியோன்

ஆபாட படங்களில் நடித்து பிரபலமானவர் சன்னி லியோன். ஒரு கட்டத்தில் ஆபாச படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்ட சன்னி லியோன், பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சன்னி லியோன். இவர் தமிழிலும் வடகறி, ஓ மை கோஸ்ட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். தமிழ்நாட்டிலும் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

24

இதனிடையே நடிகை சன்னி லியோ குறித்து ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுற்றுலாத்துறை பணியாற்றி வருகிறார் ரோஜா. ஜனசேனா கட்சி தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்து வராஹி யாத்திரையின் போது பேசினார். அவருக்கு பதிலடி கொடுத்து ரோஜா பேசியது தான் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... முதன்முறையாக ஜிவி பிரகாஷ் இசையில் டி.ஆர் பாடிய செம்ம குத்து சாங்... வெளியானது மார்க் ஆண்டனி பர்ஸ்ட் சிங்கிள்

34

அந்த வகையில், பவன் கல்யாண், ஜெகன் மோகன் ரெட்டிக்கு கற்றுக்கொடுக்கிறார். இது எப்படி இருக்கு தெரியுமா, சன்னி லியோன் வேதம் ஓதியது போல் உள்ளது என பேசி இருந்தார் ரோஜா. பவன் கல்யாணை விமர்சிப்பதற்காக சன்னி லியோனை தேவையில்லாமல் இழுத்து அவரை கொச்சைப்படுத்தும் விதமாக நடிகை ரோஜா பேசியது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. ரோஜாவின் இந்த பேச்சுக்கு நடிகை சன்னி லியோன் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

44

இதுகுறித்து சன்னி லியோன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “நான் ஆபாச நடிகை தான். என்னுடைய கடந்த காலத்தை பற்றி நான் ஒருபோதும் வருந்தியதில்லை. உங்களைப் போல் இல்லாமல் எனக்கு என்ன தோன்றியதோ அதை நான் வெளிப்படையாக செய்தேன். உங்களுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். நான் ஆபாச பட உலகை விட்டு விலகிவிட்டேன், ஆனா நீங்க இன்னும் விலகவில்லை” என குறிப்பிட்டுள்ளார். சன்னி லியோனின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... கொரியன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து.. மசாலா சேர்த்து எடுக்கப்பட்ட கிரிஞ் படம் - மாவீரனை விளாசிய ப்ளூ சட்டை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories