சிவகார்த்திகேயன் - அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் டான். டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சூரி, பால சரவணன், சிவாங்கி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ள இப்படம் கமர்ஷியல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி உள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான இப்படத்துக்கு இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக அதிகாலை முதலே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கொண்டாடினர்.
இந்நிலையில், டான் படத்தின் அதிகாலை காட்சியைக் காண டான் படக்குழுவும் தியேட்டருக்கு கேங்காக விசிட் அடித்துள்ளனர். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் ரோகினி தியேட்டரில் ரசிகர்களும் முதல் காட்சியை பார்த்து ரசித்தார்.