ரேட்டிங்கை ஏற்ற காமெடி ரோலில் தமன்னா ..அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

First Published May 12, 2022, 4:18 PM IST

தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள எப்-3 படம் குறித்த சுவாரஸ்யத் தகவலையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்

Tamannaah

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் து முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகனாவார். 

Tamannaah

அடுத்தடுத்தாக கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Tamannaah

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகளில் தமிழில் முன்னணி நாயகர்களான  அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால் என பிரபலங்களுடன் ஜோடி போட்டுள்ளார் தமன்னா. 

Tamannaah

தமிழில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து மற்ற மொழிகளுக்கு தாவிய தமன்னா, நவம்பர் ஸ்டோரி என்ற க்ரைம் த்ரில்லிங் வெப் தொடரில் நடித்திருந்தார்.   10 எபிசோடுகளாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி பாராட்டை பெற்று தந்தது.

Tamannaah

பல ஹிட் படங்களில் நடித்துள்ள தமன்னா தெலுங்கிலும் பிரபலம் இவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில்  நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்.

Tamannaah

இதையடுத்து நாயகிக்கான கதையை தேர்ந்தெடுக்கும் தமன்னா, தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்கினார்.

Tamannaah

இந்நிலையில் தமன்னா தற்போது வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள எப்-3 என்னும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இந்த படம் குறித்த சுவாரஸ்ய பெட்டியை சமீபத்தில் அளித்துள்ளார் தமன்னா. இந்த எப் 3 படம் மே 27ம் தேதி திரைக்கு வருகிறது.

Tamannaah

அந்த பேட்டியில் ,'வெங்கடேசுடன் நடித்துள்ள எனது காதாபாத்திரம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகும் என நினைக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு காமெடி நடிப்பை இந்த படத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். 

click me!