Arun Vijay, Sivakarthikeyan
பாலா இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம் வணங்கான். இப்படத்தை சுரேஷ் காமாட்சியும், பாலாவின் பி ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற 2025-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வணங்கான் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
Vanangaan Audio Launch
இந்த விழாவோடு இயக்குனர் பாலா திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடினர். இதனால் இந்த விழாவுக்கு நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார். அதுமட்டுமின்றி சிவக்குமார், சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ், நிதிலன், இயக்குனர் மிஷ்கின், மணிரத்னம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வணங்கான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டது. இதில் பேசிய சிவகார்த்திகேயன் ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
இதையும் படியுங்கள்... அப்பாவுடன் சேர்ந்து பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!
sivakarthikeyan Speech
அதன்படி அவர் பேசியதாவது : “தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் கிளைமாக்ஸ் நெகடிவ் ஆகவோ அல்லது சோகமாகவோ இருந்தால் படம் பிளாப் ஆகிவிடும் என்கிற பிம்பர் இங்கு இருக்கிறது. அதனாலேயே அமரன் பட கிளைமாக்ஸ் சோகமாக இருந்ததால் பயந்தேன். அதன்பின்னர் தான் பாலா சாரின் பிதாமகன் படம் சோகமான கிளைமாக்ஸ் உடன் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றி அடைந்ததை அறிந்து அது தனக்கு நம்பிக்கை தந்தது.
Sivakarthikeyan Praises Arun Vijay
வருகிற பொங்கல் பண்டிகைக்கு அஜித் சாரின் விடாமுயற்சி, அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகிறது. இரண்டு படங்களுக்குமே முதல் எழுத்து V தான். Vனாலே Victory தான். இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியடைந்து அடுத்த வருஷம் நன்றாக தொடங்க வாழ்த்துகிறேன். அருண் விஜய் அண்ணாவின் வெற்றிக்கு அவரின் கடும் உழைப்பு தான் காரணம். இந்த வணங்கான் படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்” என கூறினார்.
இதையும் படியுங்கள்... சூர்யா முன்னாடி நான் சிகரெட் பிடிக்கவே மாட்டேன் – இயக்குநர் பாலா!