
Top 5 Failed Sequel Movies in Tamil :தமிழ் சினிமாவில் ஹிட் கொடுத்த படங்களின் 2ஆம் பாகம் அதிக எதிர்பார்ப்புகளுடன் எடுக்கப்பட்டாலும் கூட அந்த படங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட பார்ட் படங்களான கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா 2 படங்கள் மட்டும் எப்படி வசூலில் சாதனை படைக்கின்றன என்ற கேள்வி எழுகிறது. அப்படி தமிழில் எடுக்கப்பட்ட பார்ட் 2 தோல்வி படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க. இந்தப் பட்டியலிலில் அஜித்தின் பில்லா 2, வேலை இல்லா பட்டதாரி 2, சண்டக்கோழி 2, பொன்னியின் செல்வன் 2, இந்தியன் 2 அகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
பில்லா 2:
இயக்குநர் சக்ரி டோலட்டி இயக்கத்தி அஜித், வித்யுத் ஜம்வால், பார்வதி ஓமனக்குட்டன், யோக் ஜாப்பி, ப்ரூனா அப்துல்லா ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்களுடன் திரைக்கு வந்த படம் தான் பில்லா 2. கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஒரு சாதாரண டேவிட் பில்லாவான அஜித் எப்படி ஒரு கொள்ளைக்காரனாக மாறினார் என்பது தான் இந்தப் படத்தின் கதை. ரூ.35 கோடியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
சாமி ஸ்கொயர்:
இயக்குநர் ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா முன்னணி ரோலில் நடித்து ஹிட் கொடுத்த சாமி படத்தின் 2ஆவது பாகம் தான் சாமி ஸ்கொயர். இந்தப் படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.
பெருமாள் பிச்சையின் மகன்களால் திருநெல்வேலியில் ரௌடிஷம் தலைதூக்க, குடும்பத்தோடு நெல்லைக்கு வரும் ஆறுச்சாமிக்கும் (விக்ரம்), பெருமாள் பிச்சையின் மகன்களுக்கும் இடையில் நடக்கும் சம்பவம் தான் சாமி ஸ்கொயர். இதில் முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த த்ரிஷாவிற்கு பதிலாக 2ஆம் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவி 2:
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா ஆகியோர் பலர் நடிப்பில் த்ரில்லர் கதையை மையப்படுத்தி திரைக்கு வந்த படம் தான் தேவி 2. முதல் பாகத்தில் தமன்னா பேயாக நடித்திருந்தார். 2ஆவது பாகத்தில் பிரபு தேவா பேயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டக்கோழி 2:
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட 2ஆம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால், ராஜ்கிரண், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து வெளியான படம் தான் சண்டக்கோழி 2. கோயில் திருவிழாவை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டது. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
பொன்னியின் செல்வன் 2:
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா, ஜெயம், ரவி, கார்த்தி, ஜெயராம், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெட்சுமி, பிரகாஷ் ராஜ், ரகுமான், பார்த்திபன் என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதில், ஆதித்ய கரிகாலனை கொலை செய்தது யார், பொன்னியின் செல்வனுக்கு என்ன நடந்தது. வந்தியத் தேவனின் சூழ்ச்சிக்கு பலன் கிடைத்ததா என்பது தான் கதை. இந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
வெண்ணிலா கபடி குழு 2:
சுவாரஸ்யம் மற்றும் த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்ட வெண்ணிலா கபடி குழு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், இயக்குநர் செல்வா சேகரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் 2ஆம் பாகம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கபடி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் படத்தில் காதல் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. அது இளம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால் 2ஆம் பாகம் அப்படி உருவாகவில்லை. இது முழுக்க முழுக்க அப்பா மகன் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2:
கமல் ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு பெயர் வாங்கி கொடுத்த படம் தான் இந்தியன் 2. ஊழலுக்கு எதிராக இந்தியன் தாத்தா செய்யும் சம்பவங்கள் தான் இந்தியன். சுவாரஸ்யம், எதிர்பார்ப்பு, ஆக்ஷன், காதல் காட்சிகள் என்று எல்லா கலவையும் கொண்டு எடுக்கப்பட்ட முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு கூட 2ஆம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. 2ஆம் பாகத்தில் ஏராளமான சினிமா நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஒவ்வொரு முறையும் போலீஸிடமிருந்து தப்பிக்கும் கமல் ஹாசன் கடைசியில் மக்களால் துரத்தப்படுவது போன்று கிளைமேக்ஸ் முடிவது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதில் இந்த படத்தின் 3ஆம் பாகம் வேறு வெளியாக இருக்கிறது.
இப்படி தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட 2ஆம் பாக படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில் மற்ற மொழிகளில் எடுக்கப்பட்ட 2ஆம் பாக படங்கள் மட்டும் நல்ல வரவேற்பு பெற்று வருவது எப்படி என்று கேள்வி எழுகிறது. உதாரணத்திற்கு கேஜிஎஃப் படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 2ஆம் பாகம் அதை விட வரவேற்பு பெற்று 3ஆம் பாகமும் உருவாகி வருகிறது.
இதே போன்று செம்மரம் கடத்தலை மையப்படுத்திய புஷ்பா படமும் அப்படி தான். வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் 2ஆவது பாகம் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வசூல் ரீதியகாவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுவிட்டது. இந்தப் படத்தின் 3ஆவது பாகம் உருவாக இருக்கிறது.