பணப்பெட்டி வந்ததும் எடுத்துட்டு சிட்டா பறக்கப்போகும் பிக் பாஸ் போட்டியாளர் யார் தெரியுமா?

First Published | Dec 18, 2024, 1:20 PM IST

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பணப்பெட்டி வந்ததும் எடுத்துக்கொண்டு வெளியேறும் முடிவில் உள்ள போட்டியாளர் ஒருவரை பற்றி பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைய உள்ளது. இந்நிகழ்ச்சியில் தற்போது தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ரஞ்சித், ராணவ், ரயான், செளந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார். இதில் கடந்த இரு வாரங்கள் டபுள் எவிக்‌ஷன் நடந்ததால் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Bigg Boss Tamil season 8 Contestants

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பைனலுக்கு மூன்று பேர் தகுதி பெறுவார்கள். அதில் முதலிடம் பிடிப்பவருக்கு மட்டுமே டைட்டிலும், 50 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். எஞ்சியுள்ளவர்களுக்கு எந்த வித பரிசும் கிடையாது. இதனால் இன்னும் சில வாரங்களில் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் ஒரு மிகப்பெரிய ஆஃபர் ஒன்றை வழங்க உள்ளார். அது வேறெதுவுமில்லை மணி டாஸ்க் தான். இந்த மணி டாஸ்க்கில் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுபவர்கள் வெளியேறலாம்.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வீட்டில் கோஸ்டி மோதல்; சல்லி சல்லியாய் உடைந்த கோவா கேங்!

Tap to resize

Bigg Boss Money Task soon

இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கவின், கேப்ரியல்லா, அமுதவாணன், சிபி, பூர்ணிமா ஆகியோர் மட்டுமே மணி டாஸ்கில் வெளியேறி உள்ளனர். அதிலும் கடந்த சீசனில் கலந்துகொண்ட பூர்ணிமா தான் அதிக தொகை உடன் வெளியேறினார். அவர் 16 லட்சம் பணத்துடன் கூடிய பெட்டியை எடுத்துக் கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அதேபோல் இந்த சீசனிலும் மணி டாஸ்க்கில் யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

Jeffry

ஆனால் அந்த டாஸ்க் எப்போ வரும் என்கிற எதிர்பார்ப்புடன் மற்றொரு போட்டியாளரும் பிக் பாஸ் வீட்டுக்குள் ஆவலோடு இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை ஜெஃப்ரி தான். கடந்த சில வாரங்களாக வீக் எண்ட் எபிசோடில் தன் பெயர் டேமேஜ் ஆனதை உணர்ந்துகொண்ட ஜெஃப்ரி, சில தினங்களுக்கு முன் ரஞ்சித்திடம் மணி டாஸ்க் எப்போ வரும் என கேட்டார். அதற்கு அவர் 12 அல்லது 14வது வாரத்தில் வரும் என சொன்னார்.

Raanav

இதன்மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் மணி டாஸ்கில் பணப்பெட்டியோடு வெளியே செல்ல உள்ள போட்டியாளர் ஜெஃப்ரி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. தற்போது ராணவ்வும் கை உடைந்து இருப்பதால் அவரும் பணப்பெட்டிக்காக போட்டிபோட வாய்ப்புள்ளது. இதனால் இந்த சீசனில் மணி டாஸ்கில் மிகப்பெரிய சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸ் வீட்டில் விபத்து; வலியால் துடித்த போட்டியாளர் - அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதி

Latest Videos

click me!