
List of Top 5 Hit Movies at Inox Theatre : 2024 ஆம் ஆண்டு இன்னும் 13 நாட்களில் முடிய இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த படங்கள், ஹிட் படங்கள், தோல்வி படங்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஐநாக்ஸ் திரையரங்கில் இந்த ஆண்டு வெளியான படங்களின் டாப் 5 பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில், எந்தப் படம் முதலிடம் பிடித்திருக்கிறது, எந்தப் படம் கடைசி இடம் பிடித்திருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.
முதலிடத்தில் தளபதி விஜய்யின் கோட்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் இரு வேடங்களில் நடித்து வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். கிட்டத்தட்ட ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரூ.456 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையை கோட் படைத்தது. அதோடு ஐநாக்ஸ் திரையரங்கு வெளியிட்ட பட்டியலில் டாப் 5 படங்களில் கோட் முதலிடம் பிடித்துள்ளது.
மகாராஜா:
2ஆவது இடத்தில் விஜய் சேதுபதியின் மகாராஜா படம் இடம் பெற்றுள்ளது. யதார்த்தமான கதையில் அப்பா மகள் காம்பினேஷனில் வெளியான படம் மகாராஜா. குறைவான பட்ஜெட்டில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. குப்பை தொட்டியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தன்னுடைய மகளுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடித்து அதற்குரியவர்களை தண்டிக்கும் கதை தான் மகாராஜா. இந்தப் படம் சீனாவில் வெளியிடப்படு அதிக வசூல் குவித்து சரித்திரம் படைத்தது.
அரண்மனை 4:
த்ரில்லர் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட அரண்மனை படத்தில் தமன்னா, கோவை சரளா, சுந்தர் சி, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்தப் படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்தின் கிளைமேக்ஸில் சிம்ரன் மற்றும் குஷ்பு முக்கியமான பாடல் ஒன்றிற்கு டான்ஸ் ஆடி அசத்தியிருப்பார்கள். இந்தப் படம் ஐநாக்ஸ் வெளியிட்ட பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது.
அமரன்:
4ஆவது இடத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வந்த அமரன் படம் இடம் பிடித்துள்ளது. முழுக்க முழுக்க மறைந்த தமிழக வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாக தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் மாஸ் ஹீரோவாக உயர்ந்துள்ளார்.
இதுவரையில் இவரது எந்தப் படமும் ரூ.150 கோடிக்கு அதிகமாக வசூல் குவித்தது இல்லை. அப்படியிருக்கும் போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த அமரன் படம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதோடு ரூ. 320 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது. நெகட்டிவ் விமர்சனத்தை இந்தப் படம் கொடுக்கவில்லை. மாறாக இந்தப் படத்தின் மூலமாக சிவகார்த்திகேயனுக்கு இராணுவத்தில் பணியாற்ற வாய்ப்பு வந்தது. ஆனால், அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார்.
தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ஏற்கனவே விஜய் சினிமாவிலிருந்து விலகிய நிலையில் சிவகார்த்திகேயன் அந்த இடத்தை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
கில்லி:
5ஆவது இடத்தில் இந்த ஆண்டில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட விஜய்யின் கில்லி படம் இடம் பெற்றுள்ளது. ஆக்ஷனுக்கு ஆக்சன் காட்சியையும், காமெடிக்கு காமெடி காட்சியையும், செண்டிமெண்ட், காதல் என்று எல்லா சாராம்சமும் கொண்ட ஒரு படமாக கில்லி வெளியாகியிருந்தது. விஜய்க்கு திருப்பு முனையை ஏற்படுத்திய படங்களில் கில்லி படமும் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.