ஷாலினியை போல்; திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

First Published | Dec 18, 2024, 8:57 AM IST

Keerthy Suresh Quit Cinema : நடிகை கீர்த்தி சுரேஷ் தன் நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துள்ள நிலையில், அவர் சினிமாவை விட்டு விலக உள்ளாரா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

Keerthy suresh

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா ஜோடியின் மகளான கீர்த்தி சுரேஷ், தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் படத்தில் நடித்த பின்னர் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன கீர்த்தி சுரேஷ், மீண்டும் ரெமோ படத்திலும் எஸ்.கே.வுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இந்த இரண்டு படங்களின் வெற்றிக்கு பின்னர் டாப் ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கீர்த்திக்கு குவிந்தன.

Actress Keerthy suresh

அதன்படி தனுஷுடன் தொடரி, விஜய்க்கு ஜோடியாக பைரவா மற்றும் சர்க்கார், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்தில் நட்சத்திர நடிகையாக உயர்ந்தார் கீர்த்தி. இதையடுத்து டோலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு நடித்த முதல் படமே அவரது வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் பெயர் மகாநடி. 

Tap to resize

Keerthy suresh Movies

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதன்பின் ரூட்டை மாற்றிய கீர்த்தி சுரேஷ், கமர்ஷியல் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி தற்போது பாலிவுட்டிலும் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... 405 மணிநேர உழைப்பில் உருவான கீர்த்தி சுரேஷின் திருமண புடவை! அப்படி என்ன ஸ்பெஷல்?

Keerthy suresh Upcoming Movies

பாலிவுட்டில் அவர் ஹீரோயினாக நடித்துள்ள முதல் படம் பேபி ஜான். இப்படத்தை அட்லீ தயாரித்துள்ளார். இப்படத்தில் வருண் தவான் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு முன்னரே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணமும் செய்துகொண்டார். அவர் தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டிலை கடந்த டிசம்பர் 12-ந் தேதி கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் நடைபெற்றது. இதில் விஜய், திரிஷா, அட்லீ உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Keerthy suresh Husband

திருமணத்துக்கு பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் அவர் கைவசம் தற்போது ரிவால்வர் ரீட்டா மற்றும் கண்ணிவெடி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதனால் புதிதாக அவர் எந்த படங்களிலும் கமிட் ஆகாததால் ஒரு வேளை சினிமாவை விட்டு கீர்த்தி விலகவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

Keerthy suresh Quit Cinema?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகி படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளார் என்று செய்திகள் வெளியானது. போகிற போக்கை பார்த்தால் அது நிஜமாகிவிடும் போல தெரிகிறது. நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியும் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே கல்யாணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். தற்போது அதே ரூட்டை கீர்த்தியும் பின்பற்றுகிறாரா என்கிற கேள்வி எழத் தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... என்னோட அம்மா எனக்கு 2 விஷயங்கள் சொல்லி கொடுத்தாங்க – கீர்த்தி சுரேஷ்!

Latest Videos

click me!