சம்பளத்தை டபுள் மடங்கு கூட்டிய சியான் விக்ரம் – எல்லாம் தங்கலான் படத்தோட ரியாக்‌ஷன்!

Published : Dec 18, 2024, 12:08 PM ISTUpdated : Dec 18, 2024, 12:43 PM IST

Vikram Increased his Salary After Thangalaan Movie : தங்கலான் படத்திற்கு விக்ரம் ரூ.25 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் இப்போது அவரது சம்பளம் 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
சம்பளத்தை டபுள் மடங்கு கூட்டிய சியான் விக்ரம் – எல்லாம் தங்கலான் படத்தோட ரியாக்‌ஷன்!
Chiyaan Vikram's Thangalaan

Vikram Increased his Salary After Thangalaan Movie : கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் தங்கலான் படம் திரைக்கு வந்து வெற்றி நடை போட்டது. பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் பேமஸ் ஆனது. இயக்குநர் பா ரஞ்சித் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வந்த படம் தான் தங்கலான்.

24
Vikram Thangalaan

ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்காக விக்ரம் வெயில், மழை என்று கூட பார்க்காமல் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது படம் பார்க்கும் போது தெளிவாக தெரிகிறது. காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்ட தங்கலான் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.150 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்துள்ளது. தற்போது வீர தீர சூரன் படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட துருவ நட்சத்திரம் சேப்டர் 1 – யுத்த காண்டம் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

34
Vikram 63rd Movie

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலகட்டங்களில் தோல்வி படங்களை கொடுத்து வந்த விக்ரம் அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். ஆனால், அங்கும் அவருக்கு தோல்வியே மிஞ்சியது. கடைசியில் சேது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க அவரது மார்க்கெட் கூடியது. இப்போது தங்கலான் படத்திற்கு கூட தன்னுடைய சம்பளத்தை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது தங்கலான் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்கும் படங்களுக்கு விக்ரம் ரூ.50 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

44
Thangalaan Actor Vikram Salary

தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் வீர தீரன் சூரன் 2025 ஆம் ஆண்டு திரைக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு பிறகு மண்டேலா மற்றும் மாவீரன் படங்களை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் விக்ரம்63 படத்திற்காக இணைந்துள்ளார். இந்தப் படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் 3ஆவது இடம் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, சாந்தி டாக்கீஸ் நிறுவனத்துடன் மடோன் அஸ்வின் 2ஆவது முறையாக இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு விக்ரம் ரூ.50 கோடி சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories