சினிமாவின் டிரெண்டையே மாற்றிய கேஜிஎஃப், புஷ்பா படங்கள்: எப்படி, ஏன் ஹீரோக்கள் கடத்தல் வேலை செய்றாங்க?

First Published | Dec 18, 2024, 3:25 PM IST

KGF and Pushpa Movies are Changed Cinema : காலங்காலமாக இருந்த சினிமாவின் டிரெண்டை புஷ்பா மற்றும் கேஜிஎஃப் படங்கள் மாற்றிவிட்டன.

Pushpa and KGF Movie Change Cinema Trend

KGF and Pushpa Movies are Changed Cinema : காலங்காலமாக ஹீரோ மற்றும் வில்லன் காம்பினேஷனில் தான் படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. வில்லன்கள் தான் கடத்தல், போதைப் பொருள் போன்ற குற்றங்களி ஈடுபடுவார்கள். அவர்களை பிடிப்பது தான் ஹீரோக்களின் வேலையாக இருக்கும். இப்படித்தான் சினிமாவில் கதைகள் எடுக்கப்பட்டிருக்கிறது.

KGF Chapter 1 and KGF Chapter 2

இதில், எம்ஜிஆர் முதல் இப்போது இருக்கும் சிவகார்த்திகேயன் வரையில் எல்லோருமே இப்படியான கதைகளில் தான் நடித்திருக்கிறார்கள். ஆனால், இப்போது சினிமாவின் டிரெண்டை மாற்றும் வகையில் கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளில் கோடிக்கணக்கில் பட்ஜெட் போட்டு படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய உதாரணமே கேஜிஎஃப் மற்றும் புஷ்பா படங்கள் தான். நன்கு உற்று நோக்கினால் இந்தப் படங்களில் எல்லாம் ஹீரோக்கள் தான் கடத்தல், ரௌடிஷம் செய்வார்கள். அரசியல்வாதிகள் ஹீரோக்களாக அதனை தடுப்பார்கள்.


KGF Movie

இப்படியான கதைகள் தமிழ் சினிமாவில் இன்னும் எடுக்கப்படவில்லை. இதற்கு மாறாக 80ஸ், 90ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் எடுக்கப்பட்ட படங்கள் மற்ற மொழிகளில் எடுக்கப்படவில்லை. காலங்காலமாக தமிழ் சினிமாவில் இருந்த ஒரே ஒரு டிரெண்ட் கடத்தல், செண்டிமெண்ட், காதல் காட்சிகள் தான். இதுதான் இப்போது வேறொரு கோணத்தில் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.

கேஜிஎஃப்:

2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ராமசந்திர ராஜூ ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த படம் கேஜிஎஃப். 1951 மற்றும் 2018 ஆம் ஆண்டுக்கு இடைபட்ட காலகட்டங்களில் கோலார் கோல்டு பீல்ட்ஸில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் படம் தான் கேஜிஎஃப். ரூ.80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்த படத்தில் செண்டிமெண்ட் காட்சியிலும் இடம் பெற்றிருந்தது.

KGF and KGF 2 Change Cinema Trend

கேஜிஎஃப் 2:

தங்க சுரங்கத்தை ஆண்டு வந்த கருடனை கொலை செய்து தங்க சாம்ராஜ்ஜியத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் யாஷ் ஒரு கட்டத்தில் நாட்டின் பிரதமரையே நேரில் சென்று மிரட்டும் அளவிற்கு பணத்தால் உயர்கிறார். கிளைமேக்ஸில் முன்னாள் பிரதமரை சுட்டுக் கொன்று கப்பலில் தங்கத்தை கடத்தி செல்லும் போது கடற்படைபோலீசாரால் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவர் இறந்தாரா இல்லையா என்பதோடு 2ஆம் பாகம் முடிகிறது. விரைவில் 3ஆம் பாகமும் வெளியாக இருக்கிறது. இதே போன்று ஒரு கதையில் தான் புஷ்பா படம் வெளியானது. இதில் செம்மரம் கடத்தல் கதை இடம் பெற்றிருந்தது.

Pushpa and Pushpa 2 Movie Change Cinema Trend

புஷ்பா:

செம்மரம் கடத்தல் தொழில் செய்து வரும் புஷ்பா, அந்த கும்பலின் தலைவரான கொண்டாரெட்டியிடம் வேலைக்கு சேர்ந்து. அவரிடம் ஷேர் பேசி அவருடன் பார்ட்னராக சேர்கிறார். ஒரு கட்டத்தில் கொண்டாரெட்டியின் மற்றொரு பார்ட்னரான மங்களம் ஸ்ரீனுவின் மச்சானையே போட்டு தள்ளி அவருக்கு எதிரியாக மாறுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கதை. இந்தப் படத்தோடு பின் பாதியில் தான் பன்வர் சிங் ஷெகாவத் ஐபிஎஸ் அதிகாரியாக ஃபகத் பாசில் வருகிறார். ஒரு கட்டத்தில் ஃபகத் பாசிலை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருக்கும் புஷ்பா அதன் பிறகு பிராண்டு என்ற ஒன்றால் எதிரிகளாக மாறுகிறார்கள்.

Pushpa and Pushpa 2:

புஷ்பா 2

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் வருகிறது. இதில், புஷ்பா தன்னுடைய பணபழத்தால் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளவர்களை விலைக்கு வாங்குகிறார். போட்டோ எடுக்க மறுத்ததால் முதல்வரையே மாற்றுகிறார். கடைசியில் அண்ணன் மகளுக்கு ஆபத்து வரும் போது ஒட்டுமொத்த ஊரையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து மத்திய அமைச்சரின் தம்பி மற்றும் தம்பி மகனை கொன்று அவருக்கு எதிரியாகிறார். கடையில் அண்ணன் மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட போது பாம் வெடிக்கிறது அதோடு 2ஆம் பாகம் முடிகிறது. இந்தப் படத்தின் 3ஆம் பாகம் வெளிவர இருக்கிறது.

காலங்காலமாக சினிமாவில் தங்கம் கடத்தல், போதை பொருள் கடத்தலை வில்லன்கள் செய்து வருவதும், அவர்களுக்கு எதிராக ஹீரோக்கள் செயல்படுவதுமாகத்தான் சினிமாவில் கதைகள் இருந்து வருகிறது. ஆனால், இப்போது ஹீரோக்களே இது போன்று தங்கம் மற்றும் செம்மரங்களை கடத்துவதும், அவர்களை பிடிக்க போலீசும், அரசியல்வாதிகளும் இறங்குவதும் தான் இப்போது சினிமாவின் டிரெண்டாக மாறிவிட்டது.

Latest Videos

click me!