முன்னணி நடிகர் - நடிகைகளின் மகன் மற்றும் மகள்களே வந்த வேகத்தில் திரையுலகில் இருந்து காணாமல் போகும் நிலையில், எந்த விதமான சினிமா பின்னணியும் இன்றி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து இன்று முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.
அப்படி தனக்கான படிகளை தானே செதுக்கி கொண்டு ஏறத்துவங்கிய சிவகார்த்திகேயனை, பின்னர் மக்களே வெற்றி நாயகன் என்கிற பட்டத்தை கொடுத்து, தற்போது டாப் நடிகர்கள் பட்டியலில் ஏற்றி அழகு பார்த்து வருகிறார்கள்.
மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக உள்ள 'மாவீரன்' திரைப்படம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்க கூடிய படங்களில் ஒன்றாக உள்ளது. காரணம் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக விருமன் பட நாயகி அதிதி ஷங்கர் நடிக்கிறார். அதேபோல் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார்
இவரின் படம் குறித்த அப்டேட் மட்டுமே அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் தன்னுடைய மகனின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு... நீ நடந்தால் நடை அழகு என்கிற கேப்ஷனையும் போட்டுள்ளார்.