வாரிசு பட தயாரிப்பாளரின் அடுத்த டார்கெட் சிவகார்த்திகேயன்... அவர் கேட்ட சம்பளத்தால் ஆடிப்போன தில் ராஜு..!

First Published | Dec 29, 2022, 7:44 AM IST

மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் படு தோல்வி அடைந்தது. இப்படத்தின் தோல்வியால், கண்டிப்பாக ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளார் சிவகார்த்திகேயன். இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் கதையை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் தயாராகி வருகிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கார்ட்டூனிஸ்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... 'கருமேகங்கள் கலைகின்றன' படமல்ல வாழ்க்கை - இயக்குநர் பாரதிராஜா புகழாரம்!

Tap to resize

இதுதவிர ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்தையும் கைவசம் வைத்துள்ளார் எஸ்.கே. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து கிராபிக்ஸ் பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல் கமல்ஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அதன்படி விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்துள்ள பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை தயாரிக்க உள்ளாராம். இப்படத்திற்காக அவர் கேட்ட சம்பளம் தான் தில் ராஜுவை ஆடிப்போக வைத்ததாம்.

முதலில் இப்படத்தில் நடிக்க ரூ.40 கோடி சம்பளமாக கேட்டாராம் சிவகார்த்திகேயன். பின்னர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.27 கோடி சம்பளம் தருவதாக கூறி கமிட் செய்துவிட்டாராம் தில் ராஜு.

இதையும் படியுங்கள்... தவறான உறவில் இருந்தேன்..! யார் அவர்? நடிகை அஞ்சலி கூறிய பரபரப்பு தகவல்..!

Latest Videos

click me!