அப்படியே அசினை உரித்து வைத்திருக்கும் மகள் ஆரின்! மளமளவென வளர்ந்துட்டாங்களே ? கிருஸ்துமஸ் கொண்டாட்ட போட்டோஸ்!

First Published | Dec 28, 2022, 9:30 PM IST

நடிகை அசின் தன்னுடைய மகளின் கிருத்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஸ்டோரியில் வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மலையாள திரை உலகின் மூலம் நடிகையாக அறிமுகமான அசின், தமிழில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார்.
 

இவர் நடித்து வெளியான முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்கத் துவங்கியது. அந்த வகையில் உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, சிவகாசி, என அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க துவங்கினார்.

போடுடா வெடிய... 'பொன்னியின் செல்வன் 2' ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!
 

Tap to resize

குறிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான, விஜய், அஜித், கமல் கமல், ஆகியோரோடு இவர் நடித்து பெரும்பாலான படங்கள்... சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

தமிழில் இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'கஜினி' படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது, கல்பனா கதாபாத்திரத்தில் அசின் நடித்திருந்தார். இது இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றி இவரை முழு நேர பாலிவுட் நடிகையாக மாறியது.

இதுக்கு புடவை கட்டாமலேயே போஸ் கொடுத்திருக்கலாம்! சல்லடை போன்ற புடவையில் கிக் ஏற்றும் மாளவிகா மோகனன்!
 

இதை தொடர்ந்து, கடந்த 2016 ஆம் ஆண்டு, மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மா மீது காதல் வசப்பட்ட அ  அசின், பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் ஒட்டுமொத்தமாக திரையுலகை விட்டு விலகிய இவருக்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு  ஆரின் என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது இவரின் மகளுக்கு 5 வயது  ஆகும் நிலையில், தன்னுடைய குழந்தையின் பிறந்தநாளின் போது மட்டுமே அவரது புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் அசின், தன்னுடைய மகளின் கிருஸ்த்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள் சில வற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட, அவை வேறு லெவலுக்கு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அசின் மகள் ஆரின் பார்ப்பதற்கு அப்படியே... அம்மாவை உரித்து வைத்திருப்பதாகவும், மளமளவென வளர்ந்து விட்டதாக புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!