மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை என்கிற இளவரசி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து இருந்தார் திரிஷா.
26
பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின் திரிஷாவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. கோலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
36
அடுத்ததாக தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஜோடியாக தளபதி 67 மற்றும் ஏகே 62 படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் திரிஷா.
இதுதவிர இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ராங்கி திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
56
எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய இயக்குனர் சரவணன் தான் ராங்கி படத்தையும் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதி இருக்கிறார்.
66
திரிஷா ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எடுத்த திரிஷாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்து உள்ளன.