‘ரோலெக்ஸ்’ சூர்யா முதல் ‘கதிர்’ தனுஷ் வரை... 2022-ல் மாஸான வில்லன்களாக மிரட்டிய டாப் 10 நடிகர்கள் ஒரு பார்வை

First Published Dec 28, 2022, 3:04 PM IST

சினிமாவில் ஹீரோவைப் போல் வில்லன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படங்கள் எடுக்கப்படுகின்றன. இதன்காரணமாக பல முன்னணி ஹீரோக்களே வில்லன் வேடங்களில் துணிச்சலாக நடிக்கத் தொடங்கி உள்ளனர். அந்த வகையில் 2022-ம் ஆண்டு மக்கள் மனதில் பதிந்த டாப் 10 வில்லன்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

1. ரோலெக்ஸ் (சூர்யா)

2022-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களுள் விக்ரம் படமும் ஒன்று. இதில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தாலும் கடைசி 5 நிமிடத்தில் வந்து மொத்தமாக ஸ்கோர் செய்து சென்றுவிட்டார் சூர்யா. அவரின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் வேறலெவலில் மக்கள் மத்தியில் ரீச் ஆனதால் இந்த பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் சூர்யா.

2. கதிர் (தனுஷ்)

நடிகர் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான நானே வருவேன் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அப்படத்தில் தனுஷ் நடித்திருந்த கதிர் என்கிற வில்லன் கதாபாத்திரத்திற்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்திருந்தது.

3. சந்தனம் (விஜய் சேதுபதி)

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்தபடியாக கொண்டாடப்பட்ட ஒரு கேரக்டர் என்றால் அது விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கேரக்டர் தான்.

4. நந்தினி (ஐஸ்வர்யா ராய்)

வில்லத்தனமான வேடங்களில் ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்கிற துணிச்சல் மிகுந்த வில்லி கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார் ஐஸ்வர்யா ராய்.

5. அதீரா (சஞ்சய் தத்)

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி இந்த ஆண்டு இந்தியளவில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்த கே.ஜி.எஃப் 2 படத்தில் அதீரா என்கிற கொடூர வில்லனாக மிரட்டி இருந்தார் சஞ்சய் தத்.

இதையும் படியுங்கள்... கலர்ஃபுல் உடையில் டூமச் கவர்ச்சி காட்டி அதகளப்படுத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்

6. நரேன் (கார்த்திகேயா)

அஜித் நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் திரைப்படமான வலிமையில் வில்லனாக நடித்திருந்தவர் தான் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. இவரது சாத்தான் ஸ்லேவ்ஸ் கூட்டம் மக்களை வெகுவாக கவர்ந்தது.

7. ராவுத்தர் (ஜாபர்)

லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் வில்லன் கேங்கில் ஒருவராக வரும் ஜாபர் சாதிக், கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவையே அடித்து துவம்சம் செய்து மாஸ் காட்டி இருந்தார்.

8. அர்ஜுன் (ஆரவ்)

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடித்திருந்த கலகத் தலைவன் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமான பிக்பாஸ் பிரபலம் ஆரவ், தன் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

9. இன்பா (வினய்)

டாக்டர் படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் வினய், இவர் இந்த ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார்.

10.  பூமிநாதன் (எஸ்.ஜே.சூர்யா)

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன டான் திரைப்படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.

இதையும் படியுங்கள்... தனுஷை விவாகரத்து செய்த பின்... ஹீரோயின்களுக்கு நிகராக போட்டோ ஷூட்டில் கலக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

click me!