ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன்மூலம் பிக்பாஸ் செல்லும் வாய்ப்பை பெற்ற இவர், 4-வது சீசனில் பைனல் வரை முன்னேறி அசத்தினார். அதேபோல் சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்து இறுதிவரை சென்றார்.
இதுதவிர தமிழிலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரம்யா பாண்டியன், பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக கலர்ஃபுல்லான உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் ரம்யா பாண்டியன்.