கலர்ஃபுல் உடையில் டூமச் கவர்ச்சி காட்டி அதகளப்படுத்திய ரம்யா பாண்டியன் - வைரலாகும் கிளாமர் கிளிக்ஸ்
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக கலர்ஃபுல்லான உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து, நடிகை ரம்யா பாண்டியன் நடித்தியுள்ள அசத்தலான போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ஒரே ஒரு மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் இளைஞர்களின் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இதன்மூலம் பிக்பாஸ் செல்லும் வாய்ப்பை பெற்ற இவர், 4-வது சீசனில் பைனல் வரை முன்னேறி அசத்தினார். அதேபோல் சிம்பு தொகுத்து வழங்கிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக எண்ட்ரி கொடுத்து இறுதிவரை சென்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரம்யா பாண்டியனுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் நடிப்பில் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை லிஜோ ஜோஸ் இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு முன்பே பல்வேறு விருது விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... மயோசிட்டிஸ் நோயால் முடங்கிப் போன சமந்தா.. 'போராடிக் கொண்டே இருங்கள்' லேட்டஸ்ட் பதிவால் ஆறுதல் கூறும் ரசிகர்கள்
இதுதவிர தமிழிலும் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ள ரம்யா பாண்டியன், பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். எவ்வளவு பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன்.
அந்த வகையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஸ்பெஷலாக கலர்ஃபுல்லான உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து அசத்தலான போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் ரம்யா பாண்டியன்.
வழக்கமாக சேலையில் கவர்ச்சி காட்டும் ரம்யா பாண்டியன், தற்போது மாடர்ன் உடையில் டூமச் கவர்ச்சி காட்டி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... என் வழி தனி வழி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்