அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் டான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், மனோபாலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
இப்படம் கடந்த மே 13-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியானது. ஆக்ஷன், காமெடி, செண்டிமெண்ட், ரொமான்ஸ் என பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி இருந்த இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
டான் படத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த வகையில் டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அண்மையில் படக்குழுவை அழைத்து பாராட்டி இருந்தார். மேலும் அப்படத்தின் கடைசி 30 நிமிடங்கள் பார்க்கும் போது எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்தியதாகவும் அவர் கூறி இருந்தார்.