முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி இருந்த ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்த கங்கனா நடிப்பில் தற்போது ’தக்கட்’ திரைப்படம் வெளியாகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் வெறும் ரூ.3.5 கோடி மட்டுமெ வசூலித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் ஏஜென்ட் அக்னி என்கிற கதாபாத்திரத்தில் கங்கனா ரணவத் நடித்திருந்தார். பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வில்லனாக நடித்திருந்த இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மே 20-ந் தேதி நாடு முழுவதும் ரிலீசானது. வெளியானது முதலே இந்த படத்திற்கு ஏக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன.
ரிலீசான முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 லட்சம் வசூலித்திருந்த இப்படம், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில், ரிலீசான 8-வது நாளில் இந்தியா முழுவதும் இப்படத்தை 20 பேர் மட்டுமே பார்த்துள்ளதாக கூறப்படுகிறது இதன்மூலம் அன்றைய தினம் 4,240 ரூபாய் மட்டுமே இப்படம் வசூலித்துள்ளதாக வெளியான தகவல் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.