கமலின் அடுத்த பட டைரக்டர் யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் சொன்ன "அடிப்பொலி" அப்டேட்!

Kanmani P   | Asianet News
Published : May 29, 2022, 09:44 PM IST

 மகேஷ் நாராயணன் தான் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாக விக்ரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

PREV
14
கமலின் அடுத்த பட டைரக்டர் யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் சொன்ன "அடிப்பொலி" அப்டேட்!
vikram movie

நான்கு வருட காத்திருப்பிற்கு பிறகு வரும் ஜூன் 3-ம் தேதி கமலின் விக்ரம் வெளியாகவுள்ளது. மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இதில்  கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

24
VIKRAM MOVIE

முதல் சிங்குளாக பத்தல பத்தல பாடல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியதோடு படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பின்னர் சென்னையில் பிரமாண்டமாக டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த டிரைலரும் பூகம்பத்தை கிளப்பியது. இதில் ஒரு ஆபாச வசனம் ஒன்று இடம்பெற்று கமலை விமர்சனத்திற்கு ஆளாக்கியது.

34
VIKRAM

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது விக்ரம். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள இந்த படம்தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என  பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. தமிழக உரிமையை உதயநிதி ஸ்டாலின் கைப்பற்றியுள்ளார்.

44
kamal next

இந்நிலையில் விக்ரம் ப்ரோமஷனுக்காக சமீபத்தில் பேசியிருந்த லோகேஷ் கனகராஜ், கமலின் அடுத்து பணியாற்றவுள்ள மகேஷ் நாராயணனிடம் விக்ரம் படம் குறித்து  கமல் "அடிப்பொலி" என கூறியுள்ளதாகவும். இவர் தான்  கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாகவும் கூறியுள்ளார்.  

Read more Photos on
click me!

Recommended Stories