தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன், இவரின் பிரின்ஸ் திரைப்படம் இன்று தீபாவளியை முன்னிட்டு வெளியானது. காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
படத்தின் கதை என்று பார்த்தால் "பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பள்ளிகள் சமூக அறிவியல் ஆசிரியராக இருக்கும் அன்பரசன் அதே பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்க வரும் ஜெசிகாவை காதலிக்கிறார். பின்னர் இருவரும் இணைவதில் பல இன்னல்கள் ஏற்படுகிறது. காதல் இணைவதில் ஏற்படும் கலாச்சார வேறுபாடுகளையம் எதிர்ப்புகளையும் மையப்படுத்தி மிகவும் காமெடியாக எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பிரின்ஸ்'.
தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இதனை கொண்டாடிவருகிறார்கள். மேலும் சிவகார்த்திகேயன் தற்போது, தன்னுடைய மகள் ஆராதனாவுடன் எடுத்து கொண்ட புகைப்படமும் வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஹார்ட் ஷேப் கண்ணாடி அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அப்பா - மகள் இருவரும் கூலிங் கிளாஸ் அணிந்து கூலாக கொடுத்துள்ள போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: சரக்கு பக்கத்தில் நின்று மோசமான கிளாமர் உடையில்... முதுகை முழுசாய் காட்டி போதை ஏற்றும் ஷிவானி ஹாட் போட்டோஸ்!