தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் பப்லு என்கிற பிருத்திவிராஜ். தற்போது திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பல்வேறு சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிப்பை தாண்டி சில தொழில்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் இவர் மலேசியாவில், தொழில் நிறுவனம் தொடங்க உதவி செய்த பெண் ஒருவரை நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.