பிரபல ஒளிப்பாதிவாளரான மோகனின் மகள் தான் மாளவிகா மோகனன். கேரள மாநிலத்தை சார்ந்த இவர் மும்பையில் வளர்ந்தார்.
29
Malavika Mohanan
தனது தந்தையைப் போலவே ஒளிப்பதிவாளர் அல்லது இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் மும்பை வில்சன் கல்லூரிகள் மாஸ் மீடியா படிப்பை முடித்திருந்தார் மாளவிகா மோகன்.
ஆனால் இவர் இறுதியாக நாயகியாக மிளிர்ந்து வருகிறார். முதல் முதலாக தனது தந்தையுடன் சேர்ந்து மம்முட்டி நடித்த ஃபேர்னஸ் க்ரீமின் படப்பிடிப்பிற்கு சென்றிருந்தார்.
49
Malavika Mohanan
அங்கு மாளவிகாவின் நடிப்பு ஆர்வத்தை அறிந்த மம்முட்டி தனது மகனின் அடுத்த படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பளித்தார். இதை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான பட்டம் கம்பம் என்னும் படத்தில் நாயகியாக நடித்தார் மாளவிகா மோகனன்.
59
Malavika Mohanan
பின்னர் கன்னடம், பாலிவுட் மொழிகளிலும் அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டு பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில் சசிகுமாரின் மனைவி பூங்கொடி மாலிக்காக வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மாஸ்டர் படத்தில் சாராதாவாக நடித்து படத்தின் முக்கிய திருப்புமுனைக்கு காரணமாக இருந்தார் மாளவிகா மோகன். பின்னர் தனுஷின் மாறன் படத்தில் நடித்திருந்தார்.
79
Malavika Mohanan
தற்போது பாலிவுட் படமான யுத்ராவிலும், சியானின் 61வது படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் முதலில் ராஷ்மிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்திருக்கிறது. பின்னர் மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
89
Malavika Mohanan
முன்னணி நாயகர்களின் படங்களில் தோன்றிய போதும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாளவிகா மோகனன் இன்ஸ்டாகிராமில் கலர் கலரான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
99
Malavika Mohanan
முன்னதாக பிகினியில் இவர் கொடுத்திருந்த போட்டோக்கள் அனைத்தும் ரசிகர்களின் லைக்குகளையும் குவித்திருந்தது. தற்போது சேலைமீது அதிக ஆர்வம் கொண்ட மாளவிகா மோகன் ஸ்லீவ் லெஸ் பிளவுஸில் ஒரு பக்கம் முந்தானியை இறக்கிவிட்டு கொடுத்திருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து விட்டது.