விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மீராமிதுன். மூன்றாவது சீசனில் பங்கு பெற்ற இவர் பல சர்ச்சைகளை கிளப்பி விட்டிருந்தார். இயக்குனர் சேரன் மீது இவர் கொடுத்த புகார்கள் ரசிகர்களையே வெறுப்படையச் செய்தது. தன்னைத்தானே சூப்பர் மாடல் என கூறிக்கொண்டு சுற்றிவரும் மீரா மிதுன் விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களையும் விட்டு வைக்காமல் அவர்கள் குறித்து அவதூறு பரப்பி வந்தார்.