தீபாவளி வெளியீடாக நேற்று கார்த்தியின் சர்தார், சிவகார்த்திகேயனின் பிரண்ட்ஸ் ஆகிய இரு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் சர்தார் படத்தை பி எஸ் மித்ரன் இயக்கியிருந்தார். இவர் முன்னதாக இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா, ரஷிதா விஜயன் நடித்திருந்தனர்.
தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தான் பெற்றிருந்தது. தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 400-க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் இந்த படம் நேற்று திரையிடப்பட்டது. காலை 8 மணியிலிருந்து தான் சர்தார் படம் திரைக்கு வந்ததால் ரசிகர்களின் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் செய்திகளுக்கு...bigg boss tamil 6 : ஒரு வழியாக முடிவான பிக்பாஸ் 6 காதல் ஜோடி ..இவர்கள் தானா?
இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்தது. நல்ல பாசிட்டிவ் விமர்சனம் இருப்பதால் 100 கோடிக்கு மேல் படம் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டு நிறுத்தத்திற்கு பிறகு தற்போது தான் முடிவடைந்து திரைக்கு வந்துள்ளது சர்தார். படம் வெளியானது முதலே பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வந்தது.
இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள இந்த படத்தில் தந்தை உளவாளியாகவும் மகன் போலீசாகவும் நடித்துள்ளனர். இந்திய உளவாளியாக இருக்கும் நாயகன் ராணுவ ரகசியங்களை கொண்ட ஒரு முக்கிய ஃபயிலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடுகிறார். இந்த வழக்கை விசாரிக்கும் போது தலைமறைவான மற்றொரு கார்த்தி சர்தார் என்கிற சந்திரபோஸ் (முன்னாள் உளவாளி) இடையே உள்ள தொடர்பை நாயகன் கண்டறிகிறார். தனது அப்பாவின் உண்மை வாழ்க்கை பற்றியும் மேலும் அறிய முயல்கிறார்.
மேலும் செய்திகளுக்கு... இன்று வெளியாகும் விஜய் பட அப்டேட் ?..இணையத்தை தெறிக்கவிடும் தகவல் இதோ
சர்தாருக்கும் ஃபயிலுக்கும் என்ன தொடர்பு என விஜய் கண்டறிவதே இந்த படத்தின் முக்கிய அம்சமாக இருந்தது. இதில் சந்திர போஸின் மனைவி விஜயின் தாயாக ரஷீதா நடித்துள்ளார். இந்த படத்தில் யாருமயிலேறி என்னும் பாடலை கார்த்தி பாடி இருந்தார். இந்த பாடல் முதல் சிங்கிளாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் வசூல் எவ்வளவு என பார்க்கலாம். கார்த்தியின் ஸ்பை திரில்லராக வெளியான சர்தார் படம் 3.7 கோடிகளை முதல் நாள் வசூலாக பெற்றுள்ளது.