பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவரா சிவகார்த்திகேயன் ?..எப்பேற்பட்ட பரம்பரை தெரியுமா?

Kanmani P   | Asianet News
Published : Mar 17, 2022, 03:42 PM IST

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் 'திருவீழிமிழலை சகோதரர்கள்’ வம்சாவளியை சேர்ந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சொந்த ஊர் சென்று திரும்பியுள்ளார் எஸ்.கே.

PREV
18
பாரம்பரிய இசை குடும்பத்தை சேர்ந்தவரா சிவகார்த்திகேயன் ?..எப்பேற்பட்ட பரம்பரை தெரியுமா?
sivakarthikeyan

மேடை கலைஞர் சிவகார்த்திகேயன் :

திருச்சியில் பிறந்த சிவகார்த்திகேயனின் தந்தை போலீஸ் அதிகாரி. இன்ஜினியரிங் மாணவரான இவர், தற்செயலாக கலந்துகொண்ட நிகழ்ச்சி தான் 'கலக்கப் போவது யாரு'. இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் பதிந்த சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக அறிமுகமானார். 

28
sivakarthikeyan

தனுஷின் அறிமுகம் :

தொகுப்பாளராக இருந்த போது கிடைத்த அறிமுகத்தின் வாயிலாக ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் (Dhanush) நடித்த 3 திரைப்படத்தில் காமெடியனாக அறிமுகமானார் சிவா. பின்னர்  மெரினா, மனங்கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நாயகனாகும் வாய்ப்பு கிடைத்தது. 

தொடர்புடைய செய்திகளுக்கு ...Balmain : தோனி முதல் SK வரை.. பிரபலங்கள் விரும்பி அணியும் டீ-ஷர்ட்! விலை ரூ.45,000 - அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

38
sivakarthikeyan

முன்னணி கதாநாயனான சிவகார்த்திகேயன் :

எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்து ஹிட்டுகளால் வெகு விரைவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார் சிவகார்த்திகேயன்.

48
sivakarthikeyan

கை நிறைய படவாய்ப்புகள் : 

நெல்சனின் டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கைவசம் அயலான், டான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. அதோடு கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார்.

58
sivakarthikeyan

தமிழை அடுத்து தெலுங்கு பிரவேசம் :

தமிழ் ரசிகர்ளை தனது நடிப்பால் ஈர்த்து வந்த எஸ்.கே தமிழை அடுத்து தெலுங்கில் அனுதீப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதில் அவருக்கு ஜோடியாக ஹாலிவுட் நடிகை நடிக்க உள்ளார்.

68
sivakarthikeyan

பன்முகம் காட்டின்வரும் எஸ்.கே :

நடிகராக மட்டுமின்றி பின்னணி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என முன்னணி கலக்கி வருகிறார்  சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). சமீபத்தில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான அரபிக் குத்து பாடல் செம ரீச் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகளுக்கு... Premgi as villain : என்னங்க சொல்றீங்க பிரேம்ஜி வில்லனா?... அதுவும் இந்த நடிகருக்கா! என்ன கொடுமை சார் இது

78
sivakarthikeyan

பூர்வீக ஊரில் சிவகார்த்திகேயன் :

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பூர்வீக ஊருக்கு சென்று உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் அவர்கள் திருவீழிமிழலை, திருநள்ளாறுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது.

88
sivakarthikeyan

இசைக்குடும்ப வாரிசு சிவகார்த்திகேயன் :

இந்த புகைப்படத்தோடு சேர்த்து சிவகார்த்திகேயனின் பரம்பரை வரலாறும் வெளியாகியுள்ளது. அதாவது இந்தியாவோட தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். அதேபோல் ‘திருவீழிமிழலை சகோதரர்கள்’ கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் என தகவல் சொல்கிறது.
 

Read more Photos on
click me!

Recommended Stories