Simbu : சிம்புவுக்கு கல்யாணம்..! காதலுக்கு ஓகே சொன்ன டி.ஆர்.. யாருடன் தெரியுமா..

First Published | Mar 17, 2022, 2:25 PM IST

Simbu : ஒருவழியாக சிம்புவுக்கு திருமணம் உறுதியானதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஈஸ்வரன் பட நாயகியை சிம்பு காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இந்த தகவல் வெளியானது.

simbu love story

மன்மதனாக சிம்பு :

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் காதல் லீலைகள் யாவரும் அறிந்ததே. படபங்களை காட்டிலும் காதல் வலைவீசுவத்தில் சிம்பு மிகுந்த கவனமாக இருந்தார் என்றே சொல்லலாம். ரியல் லைப்பில் காதல் மன்னனாக மன்மதலீலை புரிந்தவர் எஸ்.டி.ஆர்.

simbu love story

சிம்புவின் முதல் காதல் :

காதல் வாழ்விலும் பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்தித்துள்ளார்.சிம்புவின் முதல் காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது. அரசல் புரசலானதுதான். பெரிய இடத்து பெண் என்பதால் அந்த காதல் பெரிதாக பேசப்படவில்லையாம்.

Tap to resize

simbu love story

நயனுடன் காதலில் விழுந்த வல்லவன் :

சிம்பு வல்லவன் படத்தை இயக்கியிருந்தார். இவரின் இந்த காதல் தோல்வியே  வல்லன்  படத்தை இயக்க காரணமாக இருந்துள்ளது.. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். படத்தோடு நிறுத்தாமல் இவர்களது ரொமான்ஸ் வெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. படு நெருக்கமாக இவர்கள் கொடுத்த போஸ் தீயாய் பரவி இருந்தது.

தொடர்புடைய செய்திகளுக்கு... சிம்புவுக்கு கல்யாணம்..! காதலுக்கு ஓகே சொன்ன டி.ஆர்.. யாருடன் தெரியுமா..

simbu love story

சிம்பு - நயன் பிரேக்கப் :

சிம்பு - நயன் இருவரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை மட்டுமல்லாமல் நயன்தாராவையும் கலங்கடித்தது. இந்த போட்டோக்களை சிம்பு ஏற்பாடு செய்த ஆள் எடுத்தாக சொல்லப்படுகிறது. இதனால மனமுடைந்த நயன்தாரா சிம்புவை கை கழுவினார்.

simbu love story

 ஹன்சிகா மடக்கிய வேட்டை மன்னன் :

நயனை அடுத்து  ஹன்சிகாவுடன் செட் ஆனார் சிம்பு . வேட்டை மன்னன், வாலு படங்களில்இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தங்களது காதலை  ட்வீட்டர் வாயிலாக காதலை அறிவித்த இருவரும் ஆறே மாதங்களில் பிரிந்தனர்.

simbu love story

தோல்வியை தழுவிய சிம்பு படங்கள் :

காதல் தோல்வியோடு சேர்த்து படங்கள் தொடர்ந்து பிளாப் ஆனது சிம்புவை மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளாக்கி இருந்தது. அதன் விளைவாக எடை கூடி ஆளே மாறிப்போனார் சிம்பு. பின்னர் போதுமான பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை . இதனால் ஒரு  முடிவுக்கு திரும்பிய சிம்பு சமீபத்தில் ஈஸ்வரன் படத்தை கண்ணும் கருத்துமாக நடித்து முடித்தார். அதோடு சில மாதங்களில் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு வந்தார்.

simbu love story

ஈஸ்வரன் நாயகியை ரியலில் காதலிக்கும் சிம்பு :

ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு  இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. காதல் முற்றி தற்போது  சிம்பு-நிதி அகர்வால் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகளுக்கு... அந்த விஷயத்தில் கறார் காட்டிய சிம்பு... முடியவே முடியாதுனு சொன்ன தயாரிப்பாளர் - கைவிடப்படுகிறதா கொரோனா குமார்

simbu love story

சிம்புவுக்கு விரைவில் டும் டும் டும் :

இவர்களது காதல் திருமணத்தில் முடியவுள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு - நிதி காதலை அறிந்த சிம்புவின் பெற்றோர்கள்  திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும், ஒரு நல்ல நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. 

Latest Videos

click me!