சூர்யாவின் 42-வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இவர் இருவரும் முதன்முறையாக இணைந்து பணியாற்றும் இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே செல்கிறது. இந்த எதிர்பார்ப்புக்கு காரணம் இப்படம் குறித்து வெளியாகும் தகவல்கள் தான். இது பேண்டஸி கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருவதாகவும், இப்படத்திற்காக சூர்யா கடுமையாக உழைத்து வருகிறாராம்.
24
அதுமட்டுமின்றி இதில் சூர்யா 13 கெட் அப்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீஷா பதானி நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சூர்யா 42 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் சிவாவுக்கு V என்கிற எழுத்தில் பெயர் வைப்பது மிகவும் பிடித்தமான ஒன்று. இதன் காரணமாகத் தான் அவர் அஜித்தை வைத்து இயக்கிய 4 படங்களுக்கும் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என V-ல் தொடங்கும் டைட்டில்களை வைத்தார்.
44
தற்போது சூர்யா படத்துக்கு அதே V சென்டிமெண்டை பின்பற்ற முடிவெடுத்துள்ளாராம் இயக்குனர் சிவா. அந்த வகையில் சூர்யா 42 படத்துக்கு வீர் என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சோசியல் மீடியாவில் இதுதான் தலைப்பு என ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் சூர்யா 42 படக்குழு இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.